யாழில் முதியவரை மோதிய சொகுசு பேருந்து
Accident
Death
School Children
schools
By Independent Writer
கைதடி முதியோர் இல்லம் முன்பாக இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்த விபத்து நேற்றையதினம் (20) யாழ்ப்பாணம் - சாவகச்சேரி கைதடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
79 வயதான சச்சிதானந்தம் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த மேற்படி முதியவர் ஐந்து நாள் விடுமுறையில் தனது சொந்த இடமான வண்ணார் பண்ணைக்கு செல்ல புறப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன்போதே யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
முதியவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்