வறட்சியான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை
Sri Lanka
Department of Meteorology
El Niño
By Pavi
தற்போது நிலவும் எல் நினோ நிலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறு 97 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மாதத்தில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மழை அற்ற வறட்சியான வானிலை தொடர்ந்து நிலவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த எல் நினோ நிலைமை அடுத்த ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கும் என்பதில் 97% உலகளாவிய கணிப்புகள் உள்ளன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எல் நினோ நிலை
அடுத்த ஆண்டின் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் மழை கணிசமாகக் குறையும் என்றும் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி மனித உடலால் தாங்க முடியாத அளவுக்கு இந்த நிலைமை செல்லக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்