வேகக்கட்டுப்பாட்டையிழந்து கோர விபத்து - 23 வயது இளைஞன் உயிரிழப்பு..!
மொனராகலை, தம்பகல்ல பகுதியில் உந்துருளி ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் வியாழக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தம்பகல்ல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தம்பகல்ல மாரியாராவ பிரதான வீதியின் 7 இலக்க கட்டைப் பகுதியில் மாரியாராவ நோக்கி பயணித்து கொண்டிருந்த உந்துருளியே வேக கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
23 வயதுடைய இளைஞன்
இதன் போது பலத்த காயமடைந்த நபர் தம்பகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 23 வயதுடைய மாரியாராவ, தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
விபத்து தொடர்பில் தம்பகல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
