வன்னி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் - முல்லை வைத்தியசாலையில் கருவுறுதல் சிகிச்சை நிலையம் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றைய தினம் பெண்களுக்கான கருவுறுதல் சிகிச்சையை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கை தொடரப்பட Tamil Diouspora Alliance அமைப்பு நிதி ஆதரவை வழங்கி உள்ளது.
VP organization என்ற கிராம மக்கள் அமைப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று அந்த அமைப்பு மூலம் இது வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வன்னி மக்கள் கருவுறுதல் சிகிச்சையை இனி தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இலவச அமரர் ஊர்தி சேவை வழங்குவதற்கான நிலையம் அமைக்க வைத்தியசாலை வளாகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் க. விமலநாதன் மாவட்ட சுகாதார பணிப்பாளர் மு. உமாசங்கர் வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் மற்றும் கிராம மக்கள் அமைப்பின் இயக்குனர் தெ. இந்திரதாஸ் கலந்து கொண்டனர்.
கிராம மக்கள் அமைப்பு தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டதுடன் மாலை கடல்கரை தூய்மைப்படுத்தும் சிரமதானத்திலும் ஈடுபட்டனர். தமது மாவட்டத்தில் "நமக்காக நாம்" என்று மக்களும் இளையவர்களும் இயங்க தொடங்கி இருப்பது எதிர்கால நம்பிக்கையை தருகிறது என்கிறார் அதன் இயக்குனர் இந்திரதாஸ்.