ஒரே நாளில் வரலாற்றில் முதன்முறையாக எகிறிய தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது இதுவரை பதிவான அதிகூடிய தங்க விலையாகக் கருதப்படுகிறது.
தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி யாழ்ப்பாணத்தில் 22 கரட் தங்க பவுணொன்றின் இன்றைய விலை 360,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் 390,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக யாழ் தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை
இதற்கிடையில், முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5,400 அமெரிக்க டொலர் வரை உயரக்கூடும் என்று கணித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |