கஞ்சா கலந்த பீடி -கிழக்கிலிருந்து வடக்கிற்கு அனுப்பப்பட்ட சிறுவன்
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Sumithiran
ஒலுவில் பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருள் கலந்த பீடி வைத் திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்ட 16 வயதுச் சிறுவன் யாழ். அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதிவரை குறித்த சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று காவல் நிலைய பெரும் குற்றப் பிரிவின் பொறுப்பதி காரி, பிரதான காவல்துறைபரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீட் தெரிவித்தார்.
மாணவிகள் தொந்தரவு

மாணவிகளை தொந்தரவு செய்வதாக
கிடைத்த தகவலுக்கமைய, கடந்த
சனிக்கிழமை (18) கைது செய்யப்
பட்ட இச்சிறுவனிடம் விசாரணை
மேற்கொண்ட போது, கஞ்சா கலந்த
பீடி வைத்திருந்தமை தெரியவந்ததாக
வும், அவர் தெரிவித்தார்
5ம் ஆண்டு நினைவஞ்சலி