பாக்குநீரினையை கடந்து சாதனை படைத்த திருகோணமலை சிறுவன்
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகரன் தன்வந்த் என்ற சிறுவன் இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரைக்குமான 32 கிலோமீற்றர் நீளமான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
தனுஸ்கோடியில் இன்று அதிகாலை 12.05 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் சற்றுமுன் தலைமன்னாரை வந்தடைந்துள்ளார்.
அத்துடன் அந்த சிறுவனுடைய பாடசாலையை சேர்ந்தவர்கள் பாடசாலை கொடியினை தாங்கியவாறு அவர்கள் படகிலே பின்தொடர்ந்து அந்த சிறுவனை உட்சாகமூட்டியுள்ளனர்.
சாதனை
மேலும், உலகத்தில் 50 பில்லியன் மக்களிடையே நீச்சல் மூலம் பாக்கு நீரிணையை கடந்து ஆறாவது இடத்தினை பெறவேண்டும் என்பதே தனது இலட்சியம் என ஹரிகரன் தன்வந்த் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடற்பரப்பில் வெற்று பிளாஸ்டிக்கழிவுப் பொருட்களை அகற்றி, கடற்பரப்பின் சுத்தமாக வைத்துயிருப்பது விழிப்புணர்வினை ஏற்படுத்தல், உயிர்வாழ் உயிரினங்களில் கடல்வாழ் ஆமைகளை பாதுகாத்தல் மற்றும் முருங்கற் பாறைகளின் முக்கியத்துவத்தின் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் இந்த நீச்சலில் ஈடுபடவுள்ளதாகவும் ஹரிகரன் தன்வந்த் தெரிவித்துள்ளார்.
பாக்கு நீரிணையை கடந்து, இளைஞர்கள் மட்டத்தில் அதிகரித்துவரும் போதைவஸ்து பாவனையில் இருந்து மீள்வதற்கான விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |