திடீரென ஏற்பட்ட தீ விபத்து: அதிவேக வீதியில் தீக்கிரையான பேருந்து
தெற்கு அதிவேக வீதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்து விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் உள்ள அதிவேக வீதியில் வைத்தே இந்த பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
திடீரென தீப்பரவல்
இந்நிலையில், அதிவேக வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அதிவேக வீதி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து தீப்பிடித்து எரியத்தொடங்கியதை அடுத்து, பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறியதனால், அதிஷ்டவசமாக தீயினால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இருந்தபோதிலும், தீ விபத்து காரணமாக பேருந்து பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தீ பற்றியமைக்கான காரணம் இதுவரை சரியாக தெரியவில்லை எனவும், இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.