கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து: ஏழு பேர் படுகாயம்
Colombo
Hambantota
Accident
By Raghav
அம்பாந்தோட்டையில் (Hambantota) இருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்காலை (Tangalle) அணைக்கட்டு பகுதியில் இன்று (30) அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தங்காலை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
தங்காலை அணைக்கட்டு பாலத்தில் பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தங்காலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |