தெற்கு அதிவேக வீதியில் இன்று நிகழ்ந்த அனர்த்தம்
fire
car
Southern Expressway
By Sumithiran
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னடுவ நுழைவாயிலுக்கு அருகில் 97 வது கிலோமீட்டர் தூரத்திற்கு அருகில் இன்று (05) காலை சிறிய கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக பின்னடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் கார்ச் சாரதி காயமடையவில்லை. கொழும்பு செல்வதற்காக பின்னடுவ நுழைவாயிலில் கார் அதிவேக நெடுஞ்சாலையில் சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது மற்றும் இருக்கைகள் தீயில் சேதமடைந்தன.
தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைத்ததாக பின்னடுவ காவல் நிலையம் தெரிவித்துள்ளது.