நாமல் ராஜபக்சவிற்கு விடுக்கப்பட்டசவால்
நாளையதினம் (21) நாடாளுமன்றில் நடைபெறவுள்ள வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் முடிந்தால் எதிர்த்து வாக்களியுங்கள் பார்க்கலாம் என நாமல் ராஜபக்ச உட்பட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார இந்த சவாலை விடுத்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக
“2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதை நாங்கள் பார்த்துள்ளோம்.
மைக்குகளுக்கு முன்னால் பேசுவது ஒன்றுமில்லை. பட்ஜெட் 2024க்கு எதிராக இருப்பவர்கள் நாளை எதிர்த்து வாக்களிக்கலாம்,'' என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்றும் அவர் கூறினார்.
நாமலுக்கு ஆதரவாக நிற்பவர்களை நாளை தெரியும்
“எத்தனை பேர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்பதை நாளையதினம் பார்க்கலாம். தயவு செய்து நாடாளுமன்றத்தில் இருந்து விலகி நின்று இப்படியான கேலிகளை செய்யாதீர்கள்.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் அழைக்கின்றோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |