அரச தொழிலை தக்கவைக்க கொலை செய்யப்பட்ட குழந்தை - தாயும், தந்தையும் கைது!
நபர் ஒருவர் தனது அரசாங்க வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக தனது 6 மாத குழந்தையை கொலை செய்து கால்வாயில் எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநில அரச சட்டத்தின்படி, அரச ஊழியர் ஒருவர் இரண்டு குழந்தைகளை மாத்திரமே பெறமுடியும், மூன்றாவது குழந்தை பிறந்தால் அவர் கட்டாயமாக அரச வேலையில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பதாகும்.
குழந்தை கொலை
குறித்த ராஜஸ்தான் மாநில சட்டத்தின் படி, தன்னுடைய அரச வேலை இல்லாமல் போய்விடும் எனும் அச்சத்தில் நபர் ஒருவர் தனக்கு பிறந்த மூன்றாவது பெண் குழந்தையை இவ்வாறு கொலை செய்து கால்வாயில் எறிந்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதான ஜவஹர்லால் மேக்வால் எனும் நபரும், அவரது மனைவியான கீதா தேவி ஆகியோரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

