பூமியை நெருங்கும் அரிய வால் நட்சத்திரம்!
எழுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் பூமியை நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் 1385 ஆம் ஆண்டு தோன்றிய 12பி பான்ஸ் புரூக்ஸ்(12P/Pons–Brooks) எனும் வால் நட்சத்திரம் 1457ஆம் ஆண்டு இத்தாலியிலும் தோன்றியதாகும் மற்றும் தென்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன.
இந்நிலையில் தற்போது இந்த வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளாலான விண் பொருளான வால் நட்சத்திரமானது 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வாகும்.
வால் நட்சத்திரம்
இது சுமார் 30 கிலோமீற்றர் நீள மையப் பகுதியைக் கொண்டது என்றும், தற்போதே இது தெரியத் தொடங்கிவிட்டதாகவும் மற்றும் தொலைநோக்கி உதவியுடன் இதனைப் பார்க்கலாமெனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூன் மாதம் பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் இந்த வால் நட்சத்திரமானது மேற்கு அடிவானத்தில் தென்படுமெனவும் மற்றும் இனி 2095 ஆம் ஆண்டில்தான் தோன்றுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |