தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவி மாயம்
Missing Persons
Sri Lanka Police Investigation
By Sumithiran
தனியார்வகுப்பிற்கு சென்ற தனது மகளை காணவில்லையென தாய் ஒருவர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
மெதகம நன்னபுரவ தியகோபால பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே கடந்த 20ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மெதகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை

பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை என தாய் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மெதகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.