அதிரடியாக குறையும் மின்கட்டணம்...! மின்சாரசபை கலைப்பு சட்டமூலம்
இலங்கை வரலாற்றில் கடந்த மார்ச் மாதம், பல தசாப்தங்களாக நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையையும் தன் வசம் வைத்திருந்த இலங்கை மின்சார சபை என்ற மாபெரும் நிறுவனம் சட்டப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது.
1969 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை மின்சார சபை சட்டம் முற்றாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
கடந்த இரண்டு மூன்று வருடங்களாக மக்கள் கடுமையான மின்சாரக் கட்டண உயர்வைத் தாங்கிக்கொண்டார்கள்.
மின்சார சபை மறுசீரமைப்பு மூலம் மாதாந்த மின்சாரக் கட்டணம் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.
இலங்கையில் நிலக்கரி மற்றும் டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறைமைக்குச் பதிலாகச் சூரிய ஒளித் திட்டங்கள் மற்றும் காற்றாலை திட்டங்கள் இந்த மறுசீரமைப்பில் கொண்டுவரப்படவில்லை.
உண்மையில் இலங்கை மின்சார சபை என்ற பெயர் மாற்றப்பட்டு 6 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதே தவிர மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா என்று பார்த்தால் இல்லை என்பதே பதில்.
இந்தநிலையில் எப்படியான மறுசீரமைப்பு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் பார்வைகள் நிகழ்ச்சி.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 7 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்