சுகாதார அமைச்சின் புதிய தீர்மானம்: மக்களுக்கு வெளியான நற்செய்தி
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Sri Lanka Government
Doctors
By Harrish
குடும்ப வைத்தியர் என்ற யோசனையை இலங்கைக்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தி மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி (Hansaka Wijemuni) தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையின் கீழ் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் தலா ஒரு வைத்தியர் நியமிக்கப்பட்டு, அதற்கென தனி மையம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குடும்ப வைத்தியர் திட்டம்
இந்நிலையில், இதன் முதற்கட்ட நடவடிக்கை காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி