யாழில் தாக்கப்பட்ட மாணவன்! சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் வடமராட்சியில் தரம் ஆறிற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவன் மீது தரம் 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக காது வழியாக குருதி வந்த நிலையில் மாணவன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவமானது நெல்லியடிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
விசாரணை
பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் தரம் ஆறில் புதுமுக மாணவனாக பாடசாலைக்குச் சென்றுள்ளான்.
இந்நிலையில் மறுநாள் தரம் 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் இணைந்து புதுமுக மாணவனைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் பெற்றோரால் நெல்லியடி காவல் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் whatsapp இல் இணைந்து கொள்ளுங்கள்...! |