ஒரு முட்டைக்கு விதிக்கப்பட்ட ஒரு இலட்சம் அபராதம்
அரசாங்கம் அறிவித்த முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை மீறி ஒரேயொரு முட்டையை ரூபா 60 ற்கு விற்பனை செய்த வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கே இவ்வாறு அபராதம் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல், தீர்ப்பளித்துள்ளார்.
அதிகரித்த விலையில் முட்டை விற்பனை
மட்டக்களப்பு மாவட்ட நுகர்வேர் அதிகாரசபை உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையிலான குழுவினர் வர்த்தக நிலையம் மீது வியாழக்கிழமை (24) திகதி திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதன்போது அரசாங்கம் அறிவித்த முட்டையின் விலை 50 ரூபாயாக இருந்தபோது அதனை மீறி வர்த்தகர் 60 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்து வந்த நிலையில் அவரை பிடித்ததுடன் அவருக்கு எதிராக உடனடியாக அன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் முற்படுத்தியதையடுத்தே நீதவான் மேற்கண்ட தீர்ப்பை அறிவித்தார்.
இதேவேளை முட்டை வியாபாரத்தில் ஈடுபட்ட பல வர்த்தகர்கள் முட்டை வியாபாரத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் முட்டைக்கு மாவட்டத்தில் பலத்த தட்டுபாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
