இலங்கையில் நத்தார் பண்டிகையை கொண்டாட மனைவியுடன் வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த துயரம்
Christmas
Sri Lanka Tourism
By Sumithiran
இலங்கையில் நத்தார் பண்டிகையை கொண்டாட தனது மனைவியுடன் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கஸகஸ்தானில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணியான டிட்டோ வட்லோவ் என்ற 51 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது
இவர் பெந்தோட்டை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெந்தோட்டையில் உள்ள விடுதியொன்றில்
நத்தார் பண்டிகையை கொண்டாட வந்த இவர், பெந்தோட்டையில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளதோடு நேற்றைய தினம் (26) தனது மனைவியுடன் கடலில் நீராடச் சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்