பூமியை கடந்து சென்ற ராட்சத சிறுகோள்
Earth Day
Technology
By Sumithiran
146 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத சிறுகோள் ஒன்று நேற்று (29) பூமியை கடந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வானியலாளர்கள் 2024 MK என்று பெயரிட்ட இந்த சிறுகோள், மணிக்கு 34,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது.
இந்த சிறுகோளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது ஜூன் 16-ம் திகதி விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
மீண்டும் பூமியைக் கடந்து செல்லும்
2024 எம்கே என்ற சிறுகோள் பூமியில் இருந்து 2,95,000 கிமீ தொலைவில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இது குறைவு.
சிறுகோள் 2024 MK 2037 இல் மீண்டும் பூமியைக் கடந்து செல்லும் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்