இரண்டு கிலோ மீற்றர் தூரத்தை 18 நிமிடங்களில் நடந்து உலக சாதனை படைத்த சிறுமி!

Nuwara Eliya
By Sathangani Aug 01, 2023 06:11 AM GMT
Report

மஸ்கெலியாவில் தரம் 01இல் கல்வி பயிலும் சிறுமி இரண்டு கிலோ மீற்றர் தூரத்தை 18 நிமிடங்களில் நடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

மஸ்கெலியா சென் ஜோசப் ஆரம்பப்பிரிவு பாடசாலையில் கல்வி பயிலும் விக்னேஸ்வரன் சஸ்மிதா என்ற குறித்த சிறுமியே நேற்று (31) இச் சாதனையைப் படைத்துள்ளார்.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்திலிருந்து மஸ்கெலியா காவல் நிலையம் வரை இரண்டு கிலோ மீற்றர் தூரத்தினை நடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

உலக சாதனை சான்றிதழ்

இரண்டு கிலோ மீற்றர் தூரத்தை 18 நிமிடங்களில் நடந்து உலக சாதனை படைத்த சிறுமி! | A Girl Set World Record By Walking 2 Km In 18 Min

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் பிரவுண்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த போட்டியினை மஸ்கெலிய மாவட்ட வைத்திய அதிகாரி ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது குறித்த சிறுமிக்கு வீதியின் இரு புறங்களிலும் மக்கள் பலத்த ஆரவாரத்தை வழங்கினர்.

பிரவுன்லோ தோட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சாதனை நடை பயணத்தில் கலந்து கொண்ட சிறுமிக்கு பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன்  பொன்னாடை போரத்தி கௌரவிக்கப்பட்டு  சோழன் உலக சாதனை சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

தந்தையும் சாதனை

இரண்டு கிலோ மீற்றர் தூரத்தை 18 நிமிடங்களில் நடந்து உலக சாதனை படைத்த சிறுமி! | A Girl Set World Record By Walking 2 Km In 18 Min

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சோழன் இலங்கை கிளைத்தலைவர் யூட் எப்கைட், பிரதேச பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் பிரதேச ரிக் உறுப்பினர்கள், காவல்துறை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சோழன் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்து கொண்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன் சஸ்மிதா

''எனது தந்தை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை நடை பயணமாக வந்து சாதனை படைத்தார். நானும் ஒரு சாதனையை படைக்க வேண்டும் என்ற நோக்கில் எனது முதலாவது நடை பயண சாதனையை சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து கொண்டேன். மலையகத்திலுள்ள ஏனைய சிறுவர்களும் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டும்''  என தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025