துப்பாக்கி வியாபாரத்தில் ஈடுபட்டவர் சிக்கினார்
ருவன்வெல்ல மொரவத்த பிரதேசத்தில் குற்றவாளிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு துப்பாக்கிகளை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கைதான சந்தேகநபருடன், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி பிஸ்டல் ஆயுதம், பிஸ்டல் ஆயுதத்தில் பயன்படுத்தப்பட்ட 01 6.35 மி.மீ வெற்று தோட்டாக் குண்டுகள், ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், 02 துப்பாக்கி பரல்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவல்
விசேட அதிரடிப்படை பூகொட முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயுத விற்பனையில் ஈடுபடும் நபர்
கைது செய்யப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி 75000.00 ரூபாவிற்கு விற்பனைக்கு தயாராக இருந்ததுடன், 12 போர் வெடிமருந்து துப்பாக்கிகளும் அவரிடம் இருந்ததாகவும், அதில் ஒரு ஆயுதத்தை 60000.00 ரூபாவிற்கு விற்பனை செய்ய தயார் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர் ஆயுத விற்பனையில் ஈடுபடும் நபர் என்பதும், வேறு நபர்களிடம் இருந்து ஆயுதங்களை பெற்றுக்கொண்டு ஆயுத விற்பனையில் ஈடுபட்டது விசாரணைகளின் போது உறுதி செய்யப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்