ஏவப்பட்ட அடுத்த விநாடியில் வெடித்து சிதறிய ஜப்பானின் கைரோஸ் உந்துகணை
ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள வகயாமா மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் கைரோஸ் உந்துகணை ஏவப்பட்டுள்ளது.
இந்த உந்துகணையானது இன்று(13) ஏவப்பட்டுள்ளது.
அரசின் ஒப்புதலின் நிலையில் ஜப்பானின் ஸ்டார்ட் அப் நிறுவனமான 'ஸ்பேஸ் ஒன்' நிறுவனம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான உந்துகணை தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டது.
உந்துகணை
இந்நிலையில் செயற்கைக்கோளை சுமந்தபடி சீறிப்பாய்ந்த உந்துகணையானது ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததுடன் 18 மீட்டர் நீளமுள்ள உந்துகணை மற்றும் செயற்கைக்கோள் வெடித்து சிதறி தீப்பிடித்துள்ளன.
இதையடுத்து ஸ்பிரிங்லர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டமையினால் எரிந்துகொண்டிருந்த பாகங்கள் சுற்றியுள்ள மலைச் சரிவுகளில் விழுந்துள்ளன.
தனியார் நிறுவனம்
செயற்கைக்கோளை வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய முதல் ஜப்பான் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் ஒன் நிறுவனம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த தோல்வியானது வருவாய் ஈட்டக்கூடிய வகையில் செயற்கைக்கோள் ஏவும் ஜப்பானின் முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
மேலும் உந்துகணை வெடித்து சிதறும்போது பதிவு செய்யப்பட்ட காணொளி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |