காவல்துறைக்கு சவாலாக மாறியுள்ள கொலையாளி
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் கரந்தெனிய நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் திலிப ரொஷான் குமார இரண்டு வாரங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட போதிலும், கொலையுடன் தொடர்புடைய எவரையும் காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை.
இது தொடர்பில் சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரிடம் கொழும்பு ஊடகமொன்று மேற்கொண்ட விசாரணையில், இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வது தற்போது காவல்துறையினருக்கு சவாலாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த கொலைக்கான காரணம்
குறைந்தபட்சம் இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார். ஆனால் கிடைத்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.சாட்சியங்களை அழித்தும் கொலை மிக நுணுக்கமாக நடத்தப்பட்டதாகத் தெரிகிறது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
10க்கும் மேற்பட்ட காவல்துறை குழுக்கள்
ரொஷான் குமார கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி குருந்துகஹஹேதம் திவிதுருகமவில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். காலை சுமார் 6:50 மணி. பாடசாலை தொடங்கிய முதல் நாள் தனது இளைய பிள்ளையை பாடசாலைக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த போது அவர் கொல்லப்பட்டார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு குற்றப்பிரிவு, காவல்துறை விசேட அதிரடிப்படையினர் உட்பட 10க்கும் மேற்பட்ட காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |