சர்சையில் சிக்கிய மகிந்தவின் மனைவி
கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து குற்றப் புலனாய்வு (சிஐடி) விசாரணை கோரியுள்ளதாக தொழிலாளர் துணை அமைச்சர் மகிந்த ஜெயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய ஜெயசிங்க, இது தொடர்பாக பதில் காவல் துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
இம்புல்கொட பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் துறவிகளுக்குச் சொந்தமான நிலங்களில் தான் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக சமீபத்தில் வெளியான ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த போது அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
நில விற்பனை
அதன்போது, பௌத்த விகாரைகளுக்கு சொந்தமானவை என கூறப்பட்ட நிலங்கள் தொடர்பான பத்திரங்களை வெளியிட்ட துணை அமைச்சர் மகிந்த ஜெயசிங்க, இம்புல்கொட மற்றும் மாகோல பகுதிகளில் உள்ள நிலங்கள் 2012 இல் வாங்கப்பட்டு 2023 இல் விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதில் இஹல இம்புல்கொடவில் மகிந்த ராஜபக்ச ஆன்மீக அறக்கட்டளையின் கீழ் 2012 இல் ரூ. 500,000 க்கு வாங்கப்பட்ட ஒரு நிலம் ரூ. 10 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, அந்த நிலத்தின் உரிமையாளர் தங்காலை கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ச என்றும் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
விசாரணை
அத்தோடு, நில ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணைகளில், பத்திரங்கள் வரையப்பட்டு அலரி மாளிகையில் கையொப்பமிடப்பட்டு 2023 ஆம் ஆண்டு நுகேகொடையில் வசிக்கும் ஒருவருக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் தொழிலாளர் துணை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பௌத்த விகாரைகள் மற்றும் துறவிகளுக்குச் சொந்தமான நிலங்களில் தான் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக சமீபத்தில் வெளியான ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த மகிந்த ஜெயசிங்க, அந்த நிலங்கள் சாதாரண குடிமக்களுக்குச் சொந்தமானது என்று கூறும் பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, அசல் உரிமையாளர்கள் மற்றும் பிரதேசவாசிகளால் பிரச்சினைகள் எழுப்பப்பட்டதால், நிலங்களின் உரிமை குறித்து விசாரிக்க தாம் அந்த நிலங்களுக்குச் சென்றதாகவும் துணை அமைச்சர் மேலும் கூறியள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்