மாணவனிடம் கொள்ளையடிக்க சென்ற திருடனுக்கு நேர்ந்த கதி
கொஹுவல பகுதியில் பாடாசாலை மாணவர் ஒருவருடைய பணப்பையை திருடியவருக்கு பிரதேசவாசிகள் கல்லால் தாக்கிய சம்பவமொன்று பதிவாயுள்ளது.
அதன்போது சந்தேகநபர் தப்பி சென்றிருந்த நிலையில், நுகேகொடை- நாலந்தராம வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கொஹுவல பகுதியில் நேற்று (15) பாடசாலை மாணவர் ஒருவருடைய பணப்பையை கூரிய ஆயுதத்தைக் காட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்வபத்தின் போது, அங்கிருந்தவர்களால் கற்களால் தாக்கப்பட்டதாகவும், தாக்குதலுக்கு மத்தியிலும் திருடன் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், நுகேகொடை, நாலந்தராம வீதியில் உள்ள நடைபாதைக்கு அருகில் அந்த ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவரின் தலையின் பின்புறம் மற்றும் காதைச் சுற்றி காயங்கள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், சம்பவம் குறித்து கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்