இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு அளித்த உறுதிமொழி
                                    
                    Colombo
                
                                                
                    Tiran Alles
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    India
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    இந்தியா எப்போதும் இலங்கையின் நண்பனாக செயற்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸிடம் உறுதியளித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் பொது பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.இதன்போதே அவர் மேற்கண்ட உறுதிமொழியை அளித்தார்.
முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள்
இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கை காவல்துறையினரின் பயிற்சித் திட்டங்களுக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுதல் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள நட்புறவு, இந்தியா எப்போதும் இலங்கையின் நண்பனாக செயற்படும் என அமைச்சர் திரன் அலஸிடம் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        