ஈஸ்டர் தாக்குதல் : ஆறாத காயங்களுடன் கர்தினால்
இந்த நத்தார் விருந்தில் ஏழைகளுடன் சேர்ந்து உண்ணப் போவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று (19) கொழும்பு பேராயர்மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த கர்தினால், இந்த நத்தார் தினத்தில் நாம் கொடுக்க வேண்டிய செய்தி, அப்பாவி ஏழை குடும்பங்களுக்கு உதவுவதுதான் என்றும் கூறினார்.
ஏழைக் குடும்பங்களுக்கு உதவும் வகையில்
கிறிஸ்மஸுக்காக பொய்ச் செலவு செய்யாமல் ஏழைக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் கிறிஸ்துமஸ் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றார் கர்தினால்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகள் தொடர்பில் அமைச்சருக்கு ஒரு கருத்தும் அதிபருக்கு வேறு கருத்தும் இருப்பதாகவும், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தொடர்பில் இதுவரை விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கர்தினால் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |