கூகுள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட கோடிக்கணக்கான அபராதம்
Google
Russia
By Sumithiran
ரஷ்யாவை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக கூகுளுக்கு 421 கோடி அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
தீவிரவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகள்
ரஷ்யா குறித்து தீவிரவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இருந்ததாகவும், அதனை நீக்கக்கோரியதற்கு கூகுள் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
கூகுளின் இத்தகைய செயலை ஒருதலைபட்ச பிரசாரம் என ரஷ்யா விமர்சித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போரை, சிறப்பு இராணுவ நடவடிக்கை என ரஷ்ய அரசு குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்