முல்லைத்தீவில் பெற்ற மகனை கொடூரமாக தாக்கிய இளம் தாய் கைது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு -சுதந்திரபுரம் பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது 7 வயதுடைய மகனை கொடூரமாக தாக்கிய காணொளி கிராம மக்களால் எடுக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து காவல்துறையினர் குறித்த தாயாரை கைது செய்துள்ளனர்.
இதன்போது, பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினரின் விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,25 வயதுடைய இளம் தாயார் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து 5 மாத கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் அவரின் முதலாவது கணவனுக்கு பிறந்த குறித்த சிறுவனுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் போது தடியால் தாக்கியுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு காவல்துறையினர் குறித்த தாயினை கைது செய்துள்ளார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |