வீட்டின் மீது சரிந்து விழுந்த மண் மேடு! ஒருவர் பலி மூவர் மாயம்
Sri Lanka Upcountry People
Weather
By Dharu
ஹட்டன் - கினிகத்தேன பகுதிக்கு இடைப்பட்ட பொல்பிட்டிய பகுதியில் ஒரு வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில், ஒரு பெண் உயிரிழந்ததாகவும், மேலும் மூவரைக் காணவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அவசரகாலக் குழுக்கள் தற்போது சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
மோசமான வானிலை
மலையகத்தின் பல இடங்களில் நிலவி வரும் மோசமான வானிலைக்கு மத்தியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் நிலைமையைக் கண்காணித்து வரும் அதிகாரிகள், மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்