பயங்கரவாத அச்சுறுத்தல்..! தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்க அநுரவிடம் கோரிக்கை
பயங்கரவாத குழுக்களிடமிருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை நியமிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வரும் வேளையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த செய்திகள் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இவ்வாறான நிலைமை ஏற்படாததை தற்போதைய அரசாங்கம் உறுதி செய்யவேண்டும்.
அந்நிய செலாவணி பிரச்சினை
எங்கள் அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் புலனாய்வு தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கான பொறிமுறையை உருவாக்கியிருந்தது, இதன் மூலம் முக்கியமான தகவல்களை பரிமாறிக்கொண்ட நாங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தோம்.
இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக இலங்கை பாரிய அச்சுறுத்தல் எதனையும் எதிர்கொள்ளவில்லை. அச்சுறுத்தல்கள் குறித்து எங்களுக்கு தகவல்கள் கிடைத்தன நாங்கள் நடவடிக்கைகளை எடுத்தோம்.
தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது.
நாட்டின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவது பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்நிய செலாவணி பிரச்சினையை உருவாக்கும்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |