பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக்கின் பூர்வீகம்..! வெளியாகியுள்ள சர்ச்சை
பூர்வீகம்
ரிசி சுனக்கின் பூர்வீகம் குறித்து ஒரு தீர்மானத்தை காணமுடியாமல் உள்ளது என பத்திரிகையாளரும் ஊடகவியலாருமான திரு.கோபிரட்ணம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ரிசி சுனக்கின் பூர்வீகம் குறித்து ஒரு தீர்மானத்தை காணமுடியாமல் உள்ளது எனவும் ரிசி சுனக்கின் மூதாதையர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பதாக அல்லது காலனித்துவத்தில் இருந்து விடுபடுவதற்கு முன்பதாக பஞ்சாப்பின் ஒரு தொகுதி பாக்கிஸ்தானுக்குள்ளும் ஒரு தொகுதி இந்தியாவுக்குள்ளும் இருந்தமையால் பூர்விகத்தை அறிவதில் குழப்ப நிலை உண்டு என தெரிவித்தார்.
இருப்பினும் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய அவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இந்துக்கள் எனவும் தெரிவித்தார்.
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி - பகுதி - 1
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி - பகுதி - 2
