நாமல் ராஜபக்சவால் பணியமர்த்தப்பட்ட பெண்! விசாரணையில் வெளிவரவுள்ள மோசடிகள்
ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியமர்த்தப்பட்ட நித்யா சேனானி சமரநாயக்க தொடர்பிலான பாரிய நிதி மோசடி அம்பலமாகியுள்ளதாக சில தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் முன்னாள் விமானப் பணிப்பெண்ணான நித்யா சேனானி சமரநாயக்க, 2010 மற்றும் 2015 க்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சுற்றறிக்கையின் விதிகளைப் புறக்கணித்து, அவரது சம்பளத்திற்கு கூடுதலாக 2,394,460 ரூபாய் எரிபொருள் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளாக சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக மேற்படி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தை அவர் எரிபொருள் கொடுப்பனவாக 1,044,460 ரூபாயாகவும், போக்குவரத்து கொடுப்பனவாக 1,350,000 ரூபாயாகவும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச தரப்பு
மொட்டு அரசாங்கத்தின் போது, தனது அதிகாரத்தை தனக்குத் தேவையானபடி பயன்படுத்தியதாக மகிந்த ராஜபக்ச தரப்பு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் பின்னணியில் நாமல் ராஜபக்ச மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மோசடிகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
அதன்படி, 2015 - 2019க்கு இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி செயலாளராக பணியாற்றிய லலித் வீரதுங்க, ஜூன் 23, 2010 அன்று அவரை ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் அலுவலகத்தில் சிறப்பு திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளம் 35,000 ரூபாவாகவும், கூடுதலாக, எரிபொருள் கொடுப்பனவு 22680.00ரூபாவாகவும், , மற்றும் போக்குவரத்து செலவாக மாதம் 30,000.00 ரூபாவாகவும், ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட வெலியமுன குழு, இந்த விடயம் தொடர்பாக சேனானி சமரநாயக்கவிடம் கேள்வி எழுப்பியது.
நித்யா சேனானி சமரநாயக்க
ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் பணி குழு உறுப்பினரான நித்யா சேனானி சமரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிய விடுவிக்கப்பட்டார்.
ஆனால் உண்மையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக பணியாற்றி வருகிறார் என்பதை வெலியமுன அறிக்கை வெளிப்படுத்துகிறது. அறிக்கையின்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகிய இரண்டும் அவருக்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட ரூ.158,000 சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு குழு உறுப்பினராக, கொடுப்பனவுகள் உட்பட, விமான நிறுவனத்தால் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் வழங்கிய சேவைகள் குறித்து தெளிவான விளக்கம் எதுவும் இல்லை, தேவையின்றி ரூ.4.2 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டது என்பதையும், நித்யா சமரநாயக்க கூறிய விடயங்களையும், வெலியமுன விசாரணை அறிக்கை பின்வறுமாறு விளக்கியுள்ளது.
நாமலின் வேண்டுகோள்
தான் எந்த குறிப்பிட்ட திட்டத்தில் இணைந்திருந்தேன் என்பதை அவரால் அடையாளம் காண முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் நாமலின் வேண்டுகோளின் பேரில் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
தீபா லியனகேவைத் தவிர, அலரி மாளிகையிலோ அல்லது ஜனாதிபதி செயலகத்திலோ தனக்குத் தெரிந்த எந்த அதிகாரிகளின் பெயர்களையும் அவரால் நினைவில் கொள்ள முடியவில்லை.
அவர் பணிபுரிந்த இடத்தை சரியாக விவரிக்க முடியவில்லை. ஏனெனில் அது ஜனாதிபதி செயலகத்தில் இல்லை. மாறாக அலரி மாளிகையில் எங்கோ இருந்துள்ளது. தேவைப்படும்போது, அவர் லண்டனுக்கும் பெரும்பாலும் பிராந்திய இடங்களுக்கும் பணி குழு உறுப்பினராகப் சென்றுள்ளார்.
மேலும் பட்டியலில் இடம் பெறுவதற்கு அவருக்கு ஒரு "அங்கீகாரம்" கிடைத்துள்ளது. பதவி உயர்வு கடிதத்தில், அவர் மாதத்திற்கு குறைந்தபட்சம் 55 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்துள்ளது.
அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட குழு உறுப்பினருக்கு முறையற்ற முறையில் செலுத்தப்பட்ட பணத்தை மீட்டெடுக்கவும், பொது நிதியை தவறாகப் பயன்படுத்த அனுமதித்தவர்கள் மீது நேரடியாக வழக்குத் தொடரவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.சி. வெலியமுனா தலைமையிலான விசாரணைக் குழு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
