திருகோணமலையில் பாரிய மக்கள் போராட்டம்
இலங்கை துறைமுக அதிகாரசபையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிலங்களை இழக்கும் அபாயத்தில் உள்ள திருகோணமலை - முத்து நகர் பகுதி மக்கள், இன்று (29) திருகோணமலை (Trincomalee) மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்து நகர் பகுதியில், சூரிய மின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் நோக்கில் பொதுமக்களின் விவசாய நிலங்கள் அபிவிருத்தி என்ற பெயரில் அபகரிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அப்பகுதியில் வேலியிடப்பட்ட நிலங்கள், பல ஆண்டுகளாக விவசாயக் களமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், முந்தைய ஆலோசனைகள், உரிய தகவலளிப்பு மற்றும் மக்கள் ஒப்புதல் இல்லாமல், அரசாங்கம் முன்வைக்கும் இந்த நடவடிக்கையை மக்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
மண்ணையா சாப்பிடுவது
எங்கள் காணிகளை எங்களுக்கு கொடு, திருகோணமலையின் வளங்களும் நிலங்களும் சூறையாடப்படுவதை நிறுத்து, கம்பனிகளுக்கு இலாபம் எங்களுக்கு நடுத்தெரு, அரிசி இல்லாமல் நாம் மண்ணையா சாப்பிடுவது, இந்திய கம்பனிகளின் காணி மற்றும் வளத்திருட்டுக்கு எதிராக போராட்டத்தை தொடங்குவோம் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் போராட்ட இயக்கத்தினர் , சமூக அமைப்புகள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து காணி அபகரிப்புக்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.
போராட்டத்தின் போது மாவட்ட செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கோரப்பட்டதுடன், அதற்கான தீர்வு எட்டப்படாவிடின் எதிர்வரும் நாட்களில் பரபரப்பான மக்களெதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரப்படலாம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள விடுதலைப்புலிகள் தலைவருக்கான வீரவணக்கம்! ஆதாரம் கோரும் முன்னாள் போராளி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
