மாணவர்களை இலக்கு வைக்கும் கும்பல் : எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை
தற்போது நாடளாவிய ரீதியில் யுக்திய என்ற பெயரில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் அதனை விற்பனை செய்பவர்களையும் மையப்படுத்தி காவல்துறையினர் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்த வியாபாரத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் இந்த செயற்பாடு முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக
அந்த வகையில் தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
வளவாளர்கள் தெரிவு
இந்த போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்திற்காக 200 வளவாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவை மன்ற பயிலுனர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |