இலங்கையில் சீனாவின் மற்றுமொரு திட்டம் தயார் -ஏற்படப்போகும் பாரிய மாற்றம்
இலங்கையில் நிறுவப்பட்ட கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அறுபதுகளில் ஸ்தாபிக்கப்பட்டதாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சென்ஹோங் தெரிவித்துள்ளார்.
கண்டி வந்தடைந்த சீனத் தூதுவர், கடந்த 27ஆம் திகதி பிற்பகல் சியாம் பிரிவின் அஸ்கிரி பீடாதிபதி அதி வணக்கத்துக்குரிய வரகாகொட ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்து மகா விகாராதிபதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்தபோது மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத் துறையில் பாரிய மாற்றம்
சீன முதலீடாக சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் இந்த நாட்டில் எரிபொருள் விநியோகத் துறையில் பாரிய மாற்றம் ஏற்படும் எனவும் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கையில் 120 முதல் 140 மில்லியன் டொலர் வரை முதலீடு செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்நாட்டு இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் பென்ஹோங் மேலும் தெரிவித்தார்.
