தாய்லாந்தில் வௌவால்கள் மத்தியில் மனிதர்களுக்கு ஆபத்தான புதிய வைரஸ்
தாய்லாந்தில் வௌவால்கள் மத்தியில் மனிதர்களை தாக்கக்கூடிய புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்து விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு உரமிடுவதற்காக வௌவால்களின் மலத்தை சேகரிக்கும் குகையில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க்கில் உள்ள அரச சாரா சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் பீட்டர் தசாக், உலக சுகாதார நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
கொரோனா வைரஸை ஆய்வு செய்தவர்கள்
சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த நிபுணர்கள் குழு இது தொடர்பான வைரஸைக் கண்டுபிடித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு சாத்தியமான விலங்கியல் நோய்க்கிருமியாக நாங்கள் கருதுகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
உலகின் எந்தப் பகுதியிலும் இந்த வைரஸ் கண்டறியப்படவில்லை எனவும் இதற்கு பெயர் எதுவும் முன்மொழியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |