வெளிநாடொன்றில் விமானம் தரையிறங்குவதற்கு முன் அவசர கதவை திறக்க முயன்ற பயணி!
பனாமாவில்(Panama) உள்ள கோபா ஏர்லைன்ஸ்(Copa Airlines) விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி ஒருவர் விமானத்தில் இருந்த மற்ற பயணிகளால் தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் பிரேசிலில் இருந்து பனாமா நோக்கி பயணித்த விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசர கதவை திறக்க முயன்ற பயணி
விமானம் தரையிறங்குவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு, குறித்த நபர் உணவு தட்டில் இருந்து ஒரு பிளாஸ்டிக் கத்தியை எடுத்துக்கொண்டு விமானத்தின் பின்புறம் ஓடி, கதவைத் திறக்கும் நோக்கத்துடன் விமானப் பணிப்பெண்ணை பணயக்கைதியாக பிடிக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில், விமானத்தில் பயணித்த ஏனைய பயணிகள் குறித்த நபரை தாக்கி கட்டுப்படுத்தினர்.
இதனையடுத்து, கோபா ஏர்லைன்ஸ் விமானம் பனாமாவில் தரையிறங்கியதன் பின்னர் தேசிய பாதுகாப்புக் குழு விமானத்திற்குள் நுழைந்து குறித்த பயணியை நீதித்துறை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |