கடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
புதிய தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஏராளமான விண்ணப்பதாரர்கள் பழமையான தேசிய அடையாள அட்டைகளையே வைத்திருப்பதாக தாம் அறிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வேறுபடும் புகைப்படங்கள்
மேலும் கடவுச்சீட்டைப் பெற தேவையான ஆவணங்களுடன் ஒட்டப்பட்ட வண்ண புகைப்படத்துடன் பழைய அடையாள அட்டை புகைப்படங்கள் பெரிதும் வேறுபடுகின்றன என்றார்.

பழைய தேசிய அடையாள அட்டைகள் எண்கள் கூட தெரியாத அளவுக்கு சிதைந்து கிடப்பதால் இந்த நடைமுறை குடிவரவு, குடியல்வு திணைக்களத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐநூறுக்கும் மேற்பட்ட போலி கடவுச்சீட்டுகள்
கடந்த இரண்டு வருடங்களில் காவல்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு 523 போலி கடவுச்சீட்டுகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

எனவே புதிய தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 22 மணி நேரம் முன்