ஓடிக்கொண்டிருந்த தொடருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்தவர் யார்..!
Sri Lanka Police Investigation
Train Crowd
By Sumithiran
சிலாபம் காவல் பிரிவின் சவரன பகுதியில் நேற்று (25) பிற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி ஓடும் தொடருந்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிலாபம் காவல் நிலையம் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுமார் 70 வயதுடைய இறந்தவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. அவர் சுமார் 5 அடி 06 அங்குல உயரம், ஒல்லியானவர், சராசரி உடல் அமைப்பு கொண்டவர். மேல் உடலில் வெள்ளை கோடுகள் கொண்ட சட்டையும் கீழ் உடலில் பச்சை நிற சாரமும் அணிந்திருந்தார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சடலம் சிலாபம் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் சிலாபம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
