யாழில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த அவலம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென வெளியேறிய நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தலையாழி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் என்ற 44 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு
உயிரிழந்த நபர் மூச்செடுக்க சிரமமென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து வேறொரு விடுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோதே வைத்தியசாலையின் பின்பக்க நுழைவாயில் ஊடாக திடீரென வெளியேறி சிறிது நேரத்தில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதிகளவிலான மதுபான பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்ட குறித்த நபரின் உடலில் ஏற்றப்பட்ட கனூலா கழற்றப்பட்ட நிலையில் இரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்ப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |