கருக்கலைப்பு என பாலியல் வன்புணர்வு - காவல்துறை உத்தியோகத்தர் கைது
கருக்கலைப்பு செய்யும் போர்வையில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை தலைமையகத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 40 வயதுடையவர். அவர் காவல்துறை களப் படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் சாரதியான கான்ஸ்டபிள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காதலர்களாக காவல்துறையினர்
பிரதான காவல்துறை பரிசோதகர் இந்திக வீரசிங்கவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை பெண் ஒருவரையும் சார்ஜன்ட் ஒருவரையும் காதலர்களாக பயன்படுத்தி பிரதான காவல்துறை பரிசோதகர் மகேந்திர பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கருக்கலைப்பிற்காக ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறையொன்றை முன்பதிவு செய்திருந்த நிலையில் காதல் ஜோடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பணத்தை பெற்ற பின்னர் கருக்கலைப்பு
30 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் குறித்த பெண்ணின் உடலில் மூன்று மருந்து மாத்திரைகளை செலுத்தி கருக்கலைப்பு செய்வதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 5 200 மில்லிகிராம் மருந்துகள், 6 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
