பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 15 வயது சாதனை வீரன்
திருகோணமலையை (Trincomalee) சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா இந்தியாவின் (India) தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் (Sri Lanka) தலைமன்னாருக்கு இடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.
15 வயதான இவர் நேற்று (15) அதிகாலை 02.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல் 11.00 மணியளவில் நீந்தி முடித்துள்ளார்.
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் எட்டாவது நபராகவும், பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த உலகின் முதலாவது முஸ்லிம் நபராகவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.
தீவிர பயிற்சி
தரம் 10 இல் கல்வி கற்கும் குறித்த சிறுவன் கடந்த மூன்று மாதங்களாக இச் சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரிணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலைமன்னார் வரையான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்திக் கடந்துள்ளார்.
இலங்கையரான இள வயதையுடைய பஹ்மி ஹஸன் சலாமா நாட்டின் விளையாட்டுத்துறை வரலாற்றிலே தனது பெயரை பதிந்து கொள்வதற்காக தனது இலக்கினை அடைந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நீச்சல் போட்டியில் வெற்றி
இதுமட்டுமல்லாமல், திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்டியில் வெற்றியாளராக தெரிவாகி இருந்தார்.
குறித்த வீரன் விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![Gallery](https://cdn.ibcstack.com/article/b544b78e-ba08-4496-a997-3f5c2dabbb10/24-666e99678ad1e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f380111d-1f0a-434c-8ef8-b0ed1852577b/24-666e99680daff.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/04ad70bf-b0e0-4b47-8f93-a9c59a73febe/24-666e996880bce.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/db135978-14ba-4c24-910a-03d388d396bd/24-666e9968f2da8.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f12637f9-214e-4a0a-b2d8-b8f5d31305dd/24-666e9969e304d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8cf12de0-db81-4d61-a146-5c7567adec77/24-666e996a667a4.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/bdc5cb1d-9826-4751-a096-8d6868d2391c/24-666e996ad5d24.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a8c14ad4-0d55-4a6e-b6a4-3d9863ca4591/24-666e996b5519a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/6626ef42-6dcc-455c-9fe0-9ba15dd85a5d/24-666e996c495d1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/194f75b5-8132-4ee4-9246-0b2b67631f06/24-666e996cc01a2.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/11b46959-d201-41f6-b928-b8cab9a6659c/24-666e996d3cc81.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1d25f22c-aa4d-4791-a698-607606d43245/24-666e996da6fec.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 4 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)