புதிய அரசின் கீழ் முற்றாக மாற்றமடையப்போகும் கல்வி முறைமை
தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள கல்வி அமைச்சிற்கு முன்பள்ளி கல்வியை நேரடியாக சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
கண்டியில் (Kandy) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் முன்பள்ளி ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை
அத்தோடு, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடாத்தப்படுவதற்கு முக்கிய காரணம் நல்ல பாடசாலைகள் மற்றும் மோசமான பாடசாலைகள், பிரபல பாடசாலைகள் மற்றும் பிரபலமற்ற பாடசாலைகள் என பிரிப்பதேயாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, பாடசாலைகளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும் என்றும், அதற்காக அரசு கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
போட்டித் தேர்வுகள்
மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான காலம் குழந்தைகளுக்கு எழுத்துகள், எண்கள் அல்லது எழுதக் கற்றுக்கொடுக்கும் காலம் அல்ல என்றும், தேர்வுக்குத் தயாராகும் நேரமும் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சியில் எதிர்பார்க்கப்படும் கல்விக் கல்வி முறையில் எட்டாம் வகுப்பு வரை போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இல்லை எனவும் பிரதமர் ஹரிணி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |