மொட்டுக்கட்சியின் இரு இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் கைகலப்பு: வெளியான காரணம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மற்றும் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) ஆகியோருக்கு இடையில் சிறு கைகலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரவு விருந்துபசாரம் ஒன்றின்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்தில் குழப்பம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) அண்மையில் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் ரணவீரவின் ஈடுபாடு குறித்து லொஹான் ரத்வத்த கேள்வி எழுப்பியபோதே இந்த கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவதூறான செயல் என்று ரத்வத்த கூறியமையே கைகலப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவரை நோக்கி ரத்வத்த கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இழுக்கை தரும் செயல் என்று ரணவீர பதிலுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |