பாரதூரமான நிலைமை ஏற்படலாம் - சபாநாயகர் கடும் எச்சரிக்கை

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Sri Lanka
By Jaso Sep 20, 2022 02:39 AM GMT
Report

 பாரதூரமான நிலைமை எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு

நாட்டின் ஆட்சியாளர் ஆட்சியை கைவிட்டு செல்லும் அளவுக்கு பாரதூரமான நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருப்பதாகவும் பிரச்சினை தற்காலிகமாக அடங்கியுள்ளது எனவும் இதனால், தற்போது காணப்படும் நிலைமையை விட மிகவும் பாரதூரமான நிலைமை எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாத மட்டத்திற்கு நாடு சென்றால், மதத் தலைவர்கள் மாத்திரமல்ல அரசாங்கத்தினாலும் எதனையும் செய்ய முடியாது. இதனால், நாடு அந்த நிலைமைக்கு செல்ல இடமளிக்காது நாட்டை பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்பும் கடமையுமாகும் எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

காலி ஹபரகடவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.

பாரதூரமான நிலைமை ஏற்படலாம் - சபாநாயகர் கடும் எச்சரிக்கை | A Serious Situation May Arise

அழுத்தங்களும் பிரச்சினைகளும் இன்னும் முடியவில்லை

நாட்டில் எப்படியான நிலைமை இருந்திருந்தால், நாட்டின் ஆட்சியாளர் நாட்டின் ஆட்சியை கைவிட்டு சென்றிருப்பார். தமது ஆட்சியை கைவிட்டு, யாருக்கும் தெரியாமல் திடீரென செல்லும் அளவுக்கு நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள், சிக்கல்கள் அழுத்தங்கள் இருந்திருக்கும். அந்த அழுத்தங்களும் பிரச்சினைகளும் இன்னும் முடியவில்லை. தற்காலிகமாக அடங்கியுள்ளது. சிறிது ஆறுதல் கிடைத்துள்ளது.

தற்போது விகாரைகள் உட்பட அனைவருக்கும் மின் கட்டணங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இது தாங்கிக்கொள்ளக் கூடிய சுமையல்ல. தண்ணீர் கட்டணங்களும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மிகப் பெரிய செலவை சமாளிக்க வேண்டியுள்ளது. மிகவும் கவனமாகவும் சிக்கனமாகவும் மின்சாரம் மற்றும் தண்ணீரை பயன்படுத்த வேண்டியுள்ளது.

பாரதூரமான நிலைமை ஏற்படலாம் - சபாநாயகர் கடும் எச்சரிக்கை | A Serious Situation May Arise

இருளில் மூழ்கும் விகாரைகள்

விகாரைகளால், அதனை செய்ய முடியாது அவை பொது இடங்கள். விகாரைகளை இருளில் வைத்திருக்க முடியாது. விகாரைகளுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.

அதிபர், பிரதமர் மற்றும் மின்சக்தி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விகாரைகளுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026