உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : இன்று முதல் சாட்சியங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Law and Order
By Sathangani Aug 17, 2026 03:49 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, இன்று (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததை அடுத்து, 24 பிரதிவாதிகளுக்கும் எதிராகச் சாட்சியங்களை அழைக்கப் போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்மானித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருக்கேதீச்சரத்தில் பௌத்த விகாரை...! அம்பலமான சதித் திட்டம்

திருக்கேதீச்சரத்தில் பௌத்த விகாரை...! அம்பலமான சதித் திட்டம்

224 பேர் கொல்லப்பட்டனர் 

தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமளிக்க அழைப்பு விடுத்ததுடன், ஒவ்வொரு பிரதிவாதிக்கும் உரிய உரிமைகள் குறித்தும் விளக்கமளித்தது.

அத்துடன், அனைத்துப் பிரதிவாதிகளையும் தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : இன்று முதல் சாட்சியங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு | Easter Attack Case Court Order To Submit Evidences

இதன்போது, 6 ஆவது பிரதிாவதியான மொஹமட் ரிஸ்வான், தான் சாட்சியமளிக்கப் போவதில்லை எனவும் மௌனம் காக்கப் போவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

ஏனைய பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பது, கூண்டிலிருந்து அறிக்கை சமர்ப்பிப்பது அல்லது வெளியிலிருந்து சாட்சியங்களைச் சமர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டதுடன் 584 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது பயங்கரவாதக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

 

நீதிமன்றப் பொருட்கள் 

இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகளில் சுமார் 1,500 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், ஆவணங்கள், குண்டு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்ட 2,076 நீதிமன்றப் பொருட்கள் அரச தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்ட 10 ஒப்புதல் வாக்குமூலங்களும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : இன்று முதல் சாட்சியங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு | Easter Attack Case Court Order To Submit Evidences

இதில் பிரதிவாதி மொஹமட் பிர்தௌஸ் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயவிருப்பின் அடிப்படையில் வழங்கப்படவில்லை எனக் கூறி அதனை நீதிமன்றம் நிராகரித்தது.

எனினும், ஏனைய ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரிலேயே வழங்கப்பட்டதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதித்தது. ஐந்தாண்டு காலப்பகுதியில் 547 நாட்களுக்கு அரச தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.

இந்த நிலையில் வழக்கில் அரச தரப்பு சார்பில் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா ஆகியோருடன் அரச சட்டவாதிகளும் முன்னிலையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் குடியிருப்பொன்றில் இருந்து தவறி வழுந்த 12 வயது சிறுவன் பலி!

கொழும்பில் குடியிருப்பொன்றில் இருந்து தவறி வழுந்த 12 வயது சிறுவன் பலி!

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026