அடுத்தடுத்து தொடரப்போகும் கைது...சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் : அநுர அதிரடி
ஒரு அரச தலைவரும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்படலாம் என மே தினக் கூட்டத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படலாம், மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படலாம் என்ற நிலையில் அவர்கள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
இதுவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த விடயத்தை கூட இவர்கள் சரியான முறையில் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது.
தங்களுக்கு எதிரான எதிர்ப்பலை வரும்போது திடீரென மகிந்த ராஜபக்சவையோ மைத்திரிபால சிறிசேனவையோ கைது செய்வதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற ஊடக வெளிச்சம் மக்களின் முக்கியமான பிரச்சினைகளை திசைதிருப்பலாம்.
குறிப்பாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாயமான விவகாரம் என்பது நிலக்கரி விவகாரத்தை விட மிகப்பெரிய விவகாரமாக பேசப்படுகின்றது. இது சர்வதேச ரீதியில் இலங்கையின் நிதிநிறுவனங்கள் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். முன்னாள் ஜனாதிபதியை கைது செய்வதன் மூலம் இதனை திசைதிருப்பலாம்.
ஆட்சியில் இருக்கும் ஒரு ஜனாதிபதிக்கு ஒருவர் கைது செய்யப்படுகின்ற விவகாரம் எப்படி தெரியும்? அவ்வாறு தெரிகின்றதென்றால் அந்த விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்படுகின்றதா? அவ்வாறு சுயாதீனமாக முன்னெடுக்கப்படுகின்ற விடயம் ஜனாதிபதிக்கு முற்கூட்டியே தெரியப்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் இவர்கள் திட்டமிட்ட அரசியல் நாடகத்தை முன்னெடுக்கின்றார்கள் என்ற திலித் ஜயவீரவின் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.
இது குறித்த மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் The opinion நிகழ்ச்சியில் காண்க....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |