கனேடிய பெண்ணொருவரிடம் கண்டறியப்பட்ட விசித்திர நோய்
கனடாவின் (Canada) ரொறன்ரோ மாகாணத்தில் 50 வயதாக பெண்ணொருவருக்கு விசித்திர நோயொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த நோயினால் குறித்த பெண் ஒரு துளி மதுபானம் கூட அருந்தாமல் போதையை உணர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
காரணம்
அட்டோ ப்ரூவரி சிண்ட்ரோம் (Auto-Brewery Syndrome)என்ற இந்த நோயானது, குடல் நுண்ணுயிரிகள் கார்போஹைட்ரேட்டுகளை மதுவாக மாற்றுகின்றமையினால் ஏற்படுகிறது.
இந்த நிலையில், நோயால் பாதிக்கப்பட்ட பெண் இரண்டு வருடங்களாக, கடும் சோர்வு, பேச்சில் தடுமாற்றம், இரத்தத்தில் மது அளவு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்துள்ளார்.
உடலுக்குள் மது
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அந்த பெண்ணின் குடலில் பூஞ்சை காளான் அதிகமாக இருப்பதும், இந்த நுண்ணுயிரிகள் நுணுக்கமான தயாரிப்பாளர்களைப் போல செயல்பட்டு, உடலுக்குள் மதுவை உற்பத்தி செய்வதும் தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த மர்மமான அட்டோ ப்ரூவரி சிண்ட்ரோம் நோய் நிலைமையானது, 1940 களில் முதன் முதலாக கண்டறியப்பட்டதுடன் இதுவரையில் 20 க்கும் குறைவான வழக்குகளே பதிவாகியும் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |